மெக்ஸிக்கோ ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo தாம் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டடத்திற்கு நடந்துசென்ற சந்தர்ப்பத்தில் வீதியிலிருந்த நபர்களுடன் அவர் உரையாடியுள்ளார்.
இதன்போது பின்னால் வந்த நபரொருவர் ஜனாதிபதியின் கழுத்தில் முத்தமிட முயற்சித்ததாக பொலிஸ் நிலையத்தில் குறித்த நபருக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளது
அந்த இடத்திலிருந்த ஏனைய பெண்களுக்கும் குறித்த நபரால் இடையூறு ஏற்பட்டிருந்ததாக ஜனாதிபதி தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முதல் குடிமகளே இவ்வாறு பொது இடங்களில் துன்புறுத்தப்படுகிறார் எனின் ஏனைய பெண்களின் பாதுகாப்பு குறித்த மிகவும் வருத்தமடைவதாக ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
06 Nov 2025 | 12:22 PM
10 views
பொது இடத்தில் முத்தமிட முயன்ற நபர் : மெக்ஸிக்கோ ஜனாதிபதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
MI
mithu mithu
in உலகம்
தொடர்புடைய செய்திகள்
உலகம்
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!
03 Apr 2026 · 7:54 AM