BREAKING NEWS

மினியாபோலிஸில் அமெரிக்க பிரஜை மீது துப்பாக்கிச் சூடு: நகர முதல்வர், ஆளுநர் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

PR
priya priya punidha in Latest Updates
Report
மினியாபோலிஸில் அமெரிக்க பிரஜை மீது துப்பாக்கிச் சூடு: நகர முதல்வர், ஆளுநர் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா – மினியாபோலிஸில் (Minneapolis) ஒருவரை அமெரிக்க மத்திய குடிவரவு அதிகாரிகள் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மினியாபோலிஸ் முதல்வர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) மற்றும் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) ஆகியோர் ஒரு “கிளர்ச்சியை” (Insurrection) தூண்டிவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.