BREAKING NEWS

பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி

PR
priya priya punidha in Latest Updates
Report
பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி

பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. 

பண்டாரகம பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களாகக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

பண்டாரகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கன்கமுவ, வீரகெப்பட்டிபொல வீதியை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

கடந்த 2025 டிசம்பர் 19ஆம் திகதி முதல் சிறுமி காணாமல் போயுள்ளார். 

குறித்த சிறுமி எவருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் சிறுமியின் தாயார் பண்டாரகம காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

காணாமல் போன சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அல்லது அவர் இருக்குமிடம் குறித்து தகவல் கிடைத்தால், பின்வரும் காவல்துறை அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பண்டாரகம காவல்துறை நிலையம்: 038-2290222 

விசேட இலக்கம்: 071-8591681