BREAKING NEWS

கம்மன்பிலவின் விழாவுக்கு சஜித் செல்லவில்லையாம், Ai தான் சென்றதாம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
கம்மன்பிலவின் விழாவுக்கு சஜித் செல்லவில்லையாம், Ai தான் சென்றதாம்!

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், மீண்டும் அதே போன்றதொரு இனவாதப் போக்கினை முன்னெடுத்து வருவதாக நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக நளின் பண்டார மேலும் கூறுகையில்:ஈஸ்டர் குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பிக்க முடியாது. கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு பற்றி விரிவுரை நடத்திவிட்டு, அந்தப் பாதுகாப்பைக் கைவிட்டு ஈஸ்டர் தாக்குதலைச் சாதகமாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். ஈஸ்டர் தாக்குதலுக்கு இறந்து போன சஹ்ரானை மட்டும் பிரதான சூத்திரதாரியாகக் காட்டி எவரும் தப்பிக்க முடியாது. சஹ்ரானுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சக்தி இயங்கியுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.பிரதான சூத்திரதாரி என்ன ஆனாலும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உப சூத்திரதாரிகள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள். பிரதான சூத்திரதாரியை இனங்காண்பது அரசாங்கத்தின் கடமையாகும். சஹரான் பிரதான சூத்திரதாரி இல்லை. இதற்காகவே நாங்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தினோம். “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அளவிற்கோ அல்லது அதனைப் பகுப்பாய்வு செய்யும் அளவிற்கோ கம்மன்பிலவிடம் போதிய தொழில்நுட்ப அறிவு கிடையாது. இந்த இனவாதக் குழு மீண்டும் இனவாதத்தை தோளில் சுமந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் பார்க்கிறது, இதற்கு நாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை,விசேடமாக நான் இணங்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.

உதய கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்:”எதிர்க்கட்சித் தலைவர் அந்த நிகழ்விற்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை என நான் நம்புகிறேன். இது AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. சஜித்க்கு அங்கு போக முடியாது. சஜித் அங்கே போகவில்லை என நம்புகிறேன். இது குறித்து வினவ வேண்டும்,” எனத் தெரிவித்தார்.