BREAKING NEWS

“மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு போராட்டக் குரல் ஓய்ந்தது: நந்தன குணதிலக்கவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை!”

PR
priya priya punidha in அரசியல்
Report
“மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு போராட்டக் குரல் ஓய்ந்தது: நந்தன குணதிலக்கவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை!”

ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) முன்னாள் முக்கிய செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான நந்தன குணதிலக்க காலமானார். அவரது உடல் இன்று (19) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாணந்துறை நகர சபையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை காலமானார்.

அண்மைக் காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது உள்ளிட்ட அரசியல் விடயங்கள் குறித்து அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக நந்தன குணதிலக்க மீண்டும் அரசியல் களத்தில் பேசப்படும் ஒருவராக மாறினார்.

இதேவேளை, நந்தன குணதிலக்கவின் மறைவு குறித்து அவரது அரசியல் சமகாலத்தவரான அமைச்சர் கே.டி. லால் காந்த தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் குறிப்பொன்றைப் பதிவிட்டுள்ளார்.