NDB வங்கியில் இடம்பெற்ற உள்நாட்டு மோசடி 13.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக வங்கி நிர்வாகம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்குத் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கணக்குகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வங்கி தடையின்றி இயங்குவதாகவும் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பணப் பங்குலாபக் (Cash Dividend) கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதிய கிளை விரிவாக்கச் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து சுதந்திரமான தடயவியல் தணிக்கை (Forensic Audit) மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.