மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
⚡மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றம் செய்வது தொடர்பான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (17) மாலை 4 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 7 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

.