சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1
மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ் ஏ (hepatitis A), டைபாய்டு (typhoid) மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்று மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடங்களாக மாறும் எனவும் வெள்ள நீர் விலங்குகளின் சிறுநீருடன் கலந்து, லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக் காய்ச்சல் பரவ வழிவகுக்கும் என்றும் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் வெள்ளம் அல்லது சேறு நிறைந்த பகுதிகளில் வேலை செய்பவர்கள் அல்லது நடந்து செல்பவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் எச்சரித்துள்ளார்.
அவர்கள் பாதணிகள் (Boots), கையுறைகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும் எனவும் மேலும் காய்ச்சல், தலைவலி, சளி அல்லது தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளத்தின் போது மக்கள் பெரும்பாலும் கிணறுகள் அல்லது ஓடைகளிலிருந்து அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், இது இந்த தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, என்று மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
எனவே நுளம்பு உற்பத்தியைக் குறைக்கக் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும், சாப்பாட்டுக்கு முன் கைகளைக்
27 Oct 2025 | 10:20 AM
14 views
நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM