நேபாள அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மாற்றமாக, முன்னாள் ராப் பாடகரும் காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா (35), மூத்த அரசியல் தலைவர் கே.பி. சர்மா ஒலியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஜாப்பா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியைப் படுதோல்வி அடையச் செய்தார். இதன் மூலம் நேபாளத்தின் மிக இளைய பிரதமராகவும், முதல் ‘மாதேசி’ சமூக பிரதமராகவும் அவர் பொறுப்பேற்க உள்ளார்.
ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக 2025-ல் வெடித்த ‘Gen Z’ போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், இளைஞர்கள் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சிக்கு (RSP) பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
காத்மாண்டு மேயராக இருந்தபோது கழிவு மேலாண்மை மற்றும் நகர மேம்பாட்டில் அவர் காட்டிய அதிரடி மாற்றங்களே இந்த வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது.