எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் இன்றைய தினத்திற்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.
புதிய பேருந்து கட்டணக் கட்டமைப்பு தொடர்பான விபரங்கள் இன்று பகிரங்கப்படுத்தப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
கடந்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் பேருந்து கட்டணங்களை மாற்றுவதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயக்கம் காட்டி வந்தது. எனினும், பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.