அமெரிக்கா – நியூயோர்க் நகரிலுள்ள லாகார்டியா விமான நிலைய ஓடுபாதைக்கு அருகில், பயணிகள் விமானம் ஒன்று லொறியுடன் மோதி விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
ஏர் கனடா நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், விமானம் குறைந்த வேகத்தில் இருந்ததால் சேதம் மிகக் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லாகார்டியா விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.