BREAKING NEWS

கடலில் மிதந்த திரவத்தை பருகிய இரண்டு மீனவர்கள் பலி

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
கடலில் மிதந்த திரவத்தை பருகிய இரண்டு மீனவர்கள் பலி

நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைக் பருகியதாக கூறப்படும் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இருவரும் 28 வயதுடையர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.நுரைச்சோலை பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்றொழிலாளர்கள், கடலில் மிதந்து வந்த மர்மமான திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து அதனை அருந்தியுள்ளனர்.

திரவத்தைக் பருகியதை தொடர்ந்து, அவர்கள் கடும் சுகவீனமடைந்ததாக தெரியவந்துள்ளது.