BREAKING NEWS

தனது குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்த தாய்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
தனது குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்த தாய்

கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்த குறித்தப் பெண்ணும் அவரது கணவரும் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.

இவர்களுக்கு 1.5 வயதுடைய குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.மூத்த மகள் பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் குறித்தப் பெண் உளைச்சலில் இருந்துள்ளார்.

மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் , அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.