BREAKING NEWS

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
இன்று மாலை இடியுடன் கூடிய மழை

வடமேல், ஊவா, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (08) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பலத்த மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா, தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் ஓரளவு கனமழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது