இன்று இடம்பெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 2362 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன், 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இதில் அடங்குவர்.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிக்கவிருக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சினிமா