BREAKING NEWS

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

பருத்தித் துறை கடல் பரப்பில் எல்லைத் தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார். அத்துடன், மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவதால், தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.