BREAKING NEWS

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார்.

அவரின் மறைவை அடுத்து, வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.