ஒருவரின் செயலால் இலங்கையர்கள் அனைவரையும் தவறானவர்கள் என எடுத்துக்கொள்ள முடியாதென அண்மையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான நியுசிலாந்து சுற்றுலாப் பயணியான மொலி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் அண்மையில் தம்பிலுவில் பகுதியில் பதிவானது. தனியாக இலங்கையை சுற்றிப் பார்க்க வந்திருந்த அவர், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு தனியாக பயணித்துள்ளார். இதன்போது தம்பிலுவில் பகுதியில் வைத்து அவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.குறித்த சம்பவம் கருத்து வெளியிட்டுள்ள மொலி தான் இத்தகைய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு முகம்கொடுத்த போது இலங்கையர்கள் பலர் தனக்கு தனிப்பட்ட வகையில் உதவியதாக தெரிவித்துள்ளார்.
தனியாக பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடு இலங்கை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருவரின் செயல் காரணமாக முழு நாட்டு மக்களுக்கும் தவறானவர்கள் எனக் கொள்ள முடியாது.இலங்கை மக்கள் மிகவும் நட்புரீதியாக பழகும் எண்ணம்கொண்டவர்கள்.
தான் முகம்கொடுத்த சம்பவம் போன்றதான விடயங்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் இடம்பெற முடியும்.சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை ஊடகங்கள் உதவின. அத்துடன் இந்த விடயத்தின் பின்னர் இலங்கை பொலிசார் தனக்கு உதவிய விதம் மிகவும் வரவேற்கத்தக்கது எனவும் மொலி தெரிவித்துள்ளார்.