BREAKING NEWS

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை!

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை!

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலான்னுகே 12ஆவது போஸ்ட் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்படுகிறது.

நேற்று (22) மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஆவார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், இந்த குற்றம் தனிப்பட்ட தகராறின் காரணமாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.