BREAKING NEWS

சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
சீரற்ற வானிலை  காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் வெல்லவ பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் பயணம் தடைப்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம் ரயில் மார்க்கத்தின் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மலையகத்திற்கான ரயில் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமான ரயில் சேவை பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.