BREAKING NEWS

மின் விநியோகம் துண்டிப்பு

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
மின் விநியோகம் துண்டிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

குறிப்பாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாகவே இவ்வாறு தொடர்ச்சியாக மின் தடைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த மின் தடைகளைக் குறைப்பதற்காக இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) தனது அதிகபட்ச செயல்திறனுடன் செயற்பட்டு வருவதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.