BREAKING NEWS

ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, 2010 முதல் இதுவரையில், ஒரு கடத்தல் சம்பவமும் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரகீத் பண்டார எக்னலிகொட கடத்தப்பட்டுள்ளதுடன், மஹிந்த ஆரியவன்ஸ, தனுஷ்க சம்பத் செனவிரட்ன, பாரூக் மொஹமட் சுகைல், சுப்பிரமணியம் பாஸ்கரன், சமில ஜனித் குமார ஏக்கநாயக்க, அசங்க கிருஸாந்த பாலசூரிய, சினேஸ் உபேந்திர, இந்துனில் சிசிர விஜேநாயக்க ஆகியோர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விடயத்தில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.