வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது மின் தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் துண்டிக்கப்பட்டதால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
26 Oct 2025 | 6:35 AM
10 views
வடக்கில் இன்று மின் தடை – மக்கள் அசௌகரியத்தில்
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM