டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 09, 2026 முதல் வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்புகின்றன.
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையிலான ரயில் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படுவது, வடக்கு மாகாண மக்களுக்கான போக்குவரத்துத் தடையை நீக்கும்.
ரயில்களுக்கான இருக்கை முன்பதிவு, இன்று (ஏப்ரல் 05) முதல் நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது:
• காலை 5:15: கல்கிசை – காங்கேசன்துறை
• பிற்பகல் 1:50: காங்கேசன்துறை – கல்கிசை
புயலினால் பாதிக்கப்பட்ட பயணிகள் போக்குவரத்து மற்றும் வடக்கு மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகள், இந்த ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் மீண்டும் துரிதப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்கள அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.