BREAKING NEWS

அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிக்கு எதிராக பாரிய போராட்டம்…

PR
priya priya punidha in Latest Updates
Report
அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிக்கு எதிராக பாரிய போராட்டம்…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. ‘பெண்களை அவமதிக்கும் எதிர்க்கட்சியை கண்டிக்கிறோம்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி, ஒஷானி உமங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி, எதிர்க்கட்சியினர் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெண் தலைவர்களை இழிவுபடுத்தி வருவதாகத் தெரிவித்தார்.