BREAKING NEWS

ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்

PR
priya priya punidha in Latest Updates
Report
ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்

உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்கராஸ் தனது 22 ஆவது வயதில் 2026 அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை நான்கு செட் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை (02) நடந்த 2026 அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்கராஸ் வரலாறு படைத்தார். அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதன்முறையாக வென்றதன் மூலம், டென்னிஸ் விளையாட்டின் நான்கு முக்கிய கிண்ணங்களையும் வென்ற, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முடித்த இளைய வீரர் என்ற பெருமையை ஸ்பெய்ன் நட்சத்திரம் பெற்றார்.

சீனியர் பட்டத்தை வென்ற ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்கராஸ் தனது தொழில் வாழ்க்கையில் பெறும் ஏழாவது பெரிய பட்டம் இதுவாகும்.

கடந்த எட்டு கிரேண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஐந்தில் அல்கராஸ் வென்றுள்ளார்.

மேலும் அவரது எட்டு முக்கிய இறுதிப் போட்டிகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்திலும் வியக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளார்.

ஓபன் சகாப்தத்தில் தொழில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆறாவது நபராக, ஜோகோவிச், ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், ஆண்ட்ரே அகாசி மற்றும் ராட் லேவர் ஆகியோருடனான பட்டியலில் இணைந்துள்ளார்.

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் 23 வயதை அடைவதற்கு முன்பு ஒரு பெரிய பட்டத்தை மட்டுமே வென்றிருந்தார்.

இதேவேளை, சனிக்கிழமை இரவு மெல்போர்ன் பூங்காவில் நடந்த மகளிர்க்கான அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் எலினா ரைபாகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.