BREAKING NEWS

களுத்துறை, காலியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

PR
priya priya punidha in Latest Updates
Report
களுத்துறை, காலியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தில், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, கட்டுக்குருந்த மற்றும் பொம்புவெல பகுதிகளிலும், காலி மாவட்டத்தின் நாகொட பகுதியிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திருத்தப்பணிகளைத் தொடர்ந்து, நாளை (16) காலை 10 மணிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என நீர் வழங்கல் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.