மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டொலரை கடந்து அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
ஆசிய வர்த்தகத்தில் ப்ரேண்ட் ரக மசகு எண்ணெய் விலை 24% உயர்ந்து 114.74 டொலராகவும், நைமெக்ஸ் (Nymex) விலை 26% உயர்ந்து 114.78 டொலராகவும் அதிகரித்துள்ளது.
ஜப்பானின் நிக்கேய் (Nikkei 225) குறியீடு 7% க்கும் அதிகமாகவும், தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) குறியீடு 8% க்கும் அதிகமாகவும் வீழ்ச்சியடைந்தன.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20% பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் போக்குவரத்து போரினால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியுள்ளது.
மறைந்த அலி கமேனிக்குப் பிறகு, அவரது மகன் முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) புதிய உயர்மட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எண்ணெய் விலையேற்றம் என்பது ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலை அகற்றுவதற்காக வழங்கப்படும் ஒரு “சிறிய விலை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் மார்ச் இறுதி வரை நீடித்தால், எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டொலரைத் தாண்டக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.