தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள், பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 0707 89 88 89 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண உதவிச் சேவையை தொடர்புகொள்ள முடியும் என செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காக பராமரிப்பு சபையொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களுடன் விரைவில் பிரதேச செயலக அலுவலகங்களில் இருந்து இணைய வழி ஊடாக தொடர்புகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார்.
11 Oct 2025 | 6:46 AM
11 views
பராமரிப்பை கோரும் முதியோர் எண்ணிக்கை உயர்வு
MI
Mithu Mithu
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM