பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்!
“இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
பதுளை, பண்டாரவளையில் இன்று (12) இடம்பெறும் மலையக மக்களுக்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமைப் பத்திரங்களை பெறும் 2,000 பயனாளிகளுக்கு ஜனாதிபதி, அடையாளமாக உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.
அதேநேரம், அவர் கருத்து வெளியிடுகையில், “மலையக சமூகம் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. அவர்கள் 202 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, ஒரு அரசாங்கமாக, அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளையும் வசதியான வாழ்க்கையையும் வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
எங்கள் கவனம் பல துறைகளில் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டுவசதி வழங்குவது அரசின் பொறுப்பு. அவர்களுக்கு போதிய நல்ல சம்பளத்தை வழங்குவதாகும். அவர்கள் நீண்ட காலமாக 1,750 சம்பளத்தை கோரி வருகின்றனர்.
இந்த வருடத்திற்குள் அதனை எங்களால் முடிந்த எந்த வகையிலும் வழங்க தாங்கள் பாடுபடுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 | 6:04 PM
11 views
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்வான செய்தி
MI
Mithu Mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM