சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சமீபத்திய இருபதுக்கு 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இது சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் அடைந்த மிக உயர்ந்த தரவரிசையாகும்.


இந்த தரவரிசையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.


15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணியின் வீரர் ஒருவர் ஐசிசி இருபதுக்கு 20 தரவரிசையில் 4ஆவது இடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக 2010 ஆம் ஆண்டு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன நான்காவது இடத்தை பிடித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு திலகரத்ன தில்ஷான், சனத் ஜெயசூர்ய, மற்றும் குமார சங்ககார ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சினிமா