BREAKING NEWS

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி.

இலங்கையின் பிரதான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பல வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 317 ரூபாயைத் தாண்டியுள்ளது.

•சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கிகள்: டொலரின் விற்பனை விலை அதிகபட்சமாக ரூ. 317.75 ஆகப் பதிவாகியுள்ளது.

•மக்கள் வங்கி: டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 317.23 ஆக அதிகரித்துள்ளது.

•என்.டி.பி வங்கி (NDB): ஒரு டொலரின் விற்பனை விலை ரூ. 317.00 ஆக உயர்ந்துள்ளது.

•செலான் வங்கி: டொலர் விற்பனை விலை ரூ. 316.50 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் டொலரின் பெறுமதி தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகின்றது.