BREAKING NEWS

மற்ற நடிகர்களை போல தனக்கு விஜய் உதவவில்லை நடிகர் பொன்னம்பலம்

PR
priya priya punidha in சினிமா / பொழுதுபோக்கு
Report
மற்ற நடிகர்களை போல தனக்கு விஜய் உதவவில்லை நடிகர் பொன்னம்பலம்

நடிகர் பொன்னம்பலம் 90 களில் முன்னணி வில்லன் நடிகராகவும் ஸ்டண்ட் மேன் ஆகவும் இருந்தவர். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது வீல் சேரில் தான் எப்போதும் இருந்து வருகிறார். 

அவர் வீல் சேரிலேயே நடுரோட்டில் நடனம் ஆடி இருந்த வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது. 

இந்நிலையில் பொன்னம்பலம் அளித்த பேட்டியில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசி இருக்கிறார். மாற்றம் வேண்டும் என யார் வந்தாலும், அது விஜய்யாக இருந்தாலும் சரி, தவறு செய்தால் மக்கள் கேள்வி கேட்க தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். 

மேலும் மற்ற நடிகர்களை போல தனக்கு விஜய் உதவவில்லை, இருப்பினும் அவர் கெட்டவர் என நான் சொல்லமாட்டேன் எனவும் பொன்னம்பலம் கூறி இருக்கிறார்.