போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்காக ஒன்றுபடுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
எந்தவொரு போர் மோதலும் எந்த சமூகத்திற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது. இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்காக ஒன்றுபடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போர் அனைத்து மக்களுக்கும் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது.
இலங்கை மட்டும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. இந்தப் போரினால் பாதிக்கப்படும் பல முக்கிய துறைகள் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு நேரடியாக பாதிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்.அந்நியசெலாவணியும் பெரிதும் பாதிக்கப்படும் என்றார்.