எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் எரிவாயு விலையேற்றத்திற்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி,
12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக ரூ. 3,990 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
05 கிலோ கிராம் 120 ரூயாயினால் அதிகரிக்கப்பட்டு 1,602 ரூபாயாக அதன் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 56 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண நிலையினால் உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்களின் விலைகள் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது