BREAKING NEWS

“நாடாளுமன்றம் வர எண்ணமில்லை – தேவைப்பட்டால் ஜனாதிபதியாக வந்து நாட்டுக்கு உதவுவேன்: ரணிலுக்காக தூது சென்ற ராஜித.”

DH
dhusanthi dhusi in Latest Updates
Report
“நாடாளுமன்றம் வர எண்ணமில்லை – தேவைப்பட்டால் ஜனாதிபதியாக வந்து நாட்டுக்கு உதவுவேன்: ரணிலுக்காக தூது சென்ற ராஜித.”

இந்த நாடாளுமன்றத்திற்கு வருவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கூறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐ.தே.க தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்ய முடியும் என அவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியை அடைந்துவிட்டேன் நான் இனி எந்த பதவிகளையும் எடுக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், நான் வந்து கடந்த முறை போல உதவுவேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

எங்கு சென்றாலும், மக்கள் அவர் மீது மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால், இது நடந்திருக்காது என்று மக்கள் கூறுகிறார்கள். அவர் இருந்திருந்தால், தமக்கு ஒரு சிறந்த சூழ்நிலை இருந்திருக்கும் என்று மக்கள் கூறுவதாக ராஜித சேனாரத்ன எடுத்துரைத்தார்.