விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த 26ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு பரசுராம் இயக்கி கீதா கோவிந்தம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
இத் திரைப்படம் இருவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு கேட்கப்பட்டவர், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா தானாம்.
அண்மையில் ஒரு பேட்டியில் இதுகுறித்து ஐஸ்வர்யா கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை லாவண்யா திரிபாதி, ராஷி கண்ணா, அனு இம்மானுவேல் ஆகியோரும் சில காரணங்களினால் இப் படத்தை நிராகரித்துள்ளனர்.
இறுதியாகவே ராஷ்மிகா இப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.



