BREAKING NEWS

உணவகங்களில் இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை மாற்றம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
உணவகங்களில் இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை மாற்றம்!

லிட்ரோ எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளில் இன்று (ஏப்ரல் 06) நள்ளிரவு முதல் புதிய மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.

எரிவாயு விலையேற்றத்தினால் உணவகங்களின் இயக்கச் செலவு அதிகரித்துள்ளதால், சோறு, கறிப் பொதிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

தேங்காய் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை முன்னிட்டு, சிற்றுண்டி (Short eats) வகைகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எரிவாயு செலவு அதிகரிப்பு உணவகத் துறையைப் பெருமளவில் பாதித்துள்ளதால், தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.