உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 30 ஆம் திகதி இரவு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசேட மருத்துவர்கள் குழுவால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்கள ஊடகமொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ரொஹான் ஓலுகல தற்போது குணமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்