BREAKING NEWS

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி

PR
priya priya punidha in Latest Updates
Report
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி

சேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 173 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களில் 2,199 குடும்பங்களைச் சேர்ந்த 6,680 பேர் தொடர்ந்தும் 85 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவ…
[20:21, 25/01/2026] My Dialog: ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – புதிய கூட்டணி அமைகின்றமையால் எமது ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் செயற்படுகின்றது. நாட்டு மக்கள் எம் பக்கமே உள்ளனர்.எனவே, ரணில் – சஜித் தரப்பினர் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் என்ன எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. – என்றார்.
[20:22, 25/01/2026] My Dialog: “கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எந்தவகையிலும் எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தவில்லை. பாட உள்ளடக்கங்கள் தயாரிப்பிலும், அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் எதிர்க்கட்சியின் எவ்வித பங்களிப்பும் இல்லா நிலையில், சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியான நாமே காரணம் எனக் கூறுவது அடிப்படையற்றதாகும். கல்வி சீர்திருத்தங்களை ஜனாதிபதியே அநுரகுமார திஸாநாயக்கவே ஒத்திவைத்தார்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்வித் துறை நிபுணர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர்களுடன் நேற்றுமுன்தினம் (24) நடைபெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முறையாக இதனை முன்னெடுக்க வேண்டுமான…
[20:23, 25/01/2026] My Dialog: வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 2 தராசுகள், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்த ஐஸ் போதைப்பொருள் தொகையின் பெறுமதி 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப…
[20:25, 25/01/2026] My Dialog: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் பணிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவரிடமிருந்து மீளப் பெற கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்விடயம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“சிறீதரனுக்கு நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல் குழுவின் கூட்டத்தில் அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.

அந்த நேரத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்குவதற்கும் அந்த அரசியல் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாங்கள் நியமித்தோம்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இவை பற்றி ஆராயப்பட்டன.

அரசியல் குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல் குழுவுக்கே இருக்கின்றது. எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்தக் குழுவுக்கு உண்டு.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அதே அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் அரசமைப்புக் கவுன்ஸிலிலிருந்து இராஜிநாமாச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை ஏகமனதாக வழங்கியிருந்தது. நேற்றைய தினம் சுமார் நான்கு மணி நேரம் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர் குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ, அந்தக் குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்தோம்.” – என்றார்.