மோசடியான முறையில் வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (RMV) முன்னாள் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட நான்கு உயர் அதிகாரிகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று (12) பிற்பகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, இவர்களை மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்:
வாசல பிரியந்த பண்டார ஈரியகம – முன்னாள் உதவிப் பணிப்பாளர், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்.
பாலகிருஷ்ணன் சஞ்சீவனி – முன்னாள் பிரதி ஆணையாளர்.
நயனா குமுதுனி – விசாரணை மற்றும் அபிவிருத்தி உதவியாளர்.
தம்மிக நிரோஷன் – முன்னாள் திணைக்கள எழுத்தர்.
சட்டவிரோதமான முறையில் வாகனங்களைப் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நீண்டகால விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.