டெஸ்லாவின் ரோபோடெக்சி (Robotaxi) சேவை ஏற்கனவே பல அமெரிக்க நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சேவை பரவலாகக் கிடைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஈலான் மஸ்க் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) முதல்முறையாகப் உரையாற்றிய அவர், ஐரோப்பாவில் முழுமையான தன்னாட்சி ஓட்டுநர் (fully autonomous driving) வசதிக்கான அனுமதியை அடுத்த மாதத்திற்குள் பெற இலக்கு வைத்துள்ளதாகக் கூறினார்.
அதேவேளை, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய சேவை மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு வழங்கப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் மற்றும் அதன் Grock செயற்கை நுண்ணறிவு மென்பொருளால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், இவரது இந்த வருகை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.