BREAKING NEWS

சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை

MI
Mithu Mithu in உள்ளூர் செய்திகள்
Report
சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை
சந்தையில் எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை ரூ3,000ற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 200 ரூபாய் முதல் 300க்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்பட்ட 1 கிலோகிராம் எலுமிச்சையின் விலை பல வாரங்களாக சடுதியாக அதிகரித்துள்ளது.

மழை இல்லாததால் எலுமிச்சை அறுவடை குறைந்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்