BREAKING NEWS

“ராஜஸ்தானில் எனக்கான நேரம் முடிந்தது!” – சிஎஸ்கே-வில் இணையும் சஞ்சு சாம்சன்.

DH
dhusanthi dhusi in விளையாட்டு
Report
“ராஜஸ்தானில் எனக்கான நேரம் முடிந்தது!” – சிஎஸ்கே-வில் இணையும் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நீண்டகாலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூணாகவும், தலைவராகவும் விளங்கிய சஞ்சு சாம்சன், அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் அணி நிர்வாகம் ரியான் பராக்கை முன்னிறுத்த முயன்றதாலும், அங்கு நிலவிய உள்ளக அரசியல் காரணமாகவும் சஞ்சு சாம்சன் இந்த முடிவை எடுத்துள்ளார். “ஒவ்வொரு நபருக்கும் ஒரு அணியில் குறிப்பிட்ட காலம் தான் அமையும். ராஜஸ்தான் அணியில் எனக்கான நேரம் முடிந்துவிட்டது” என சஞ்சு மனம் திறந்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்று இருக்கும் சஞ்சு சாம்சன், மஞ்சள் சீருடையில் களமிறங்குவது சிஎஸ்கே இரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் மார்ச் 30-ஆம் திகதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இத்தனை ஆண்டுகள் ராஜஸ்தானுக்காக ஆடிய சஞ்சு, முதல் முறையாக அதே அணிக்கு எதிராக களமிறங்குகிறார். இது குறித்துப் பேசிய அவர், “மைதானத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டமாட்டேன். விளையாட்டில் யார் வெற்றியாளர் என்பதே முக்கியம். ராஜஸ்தான் அணி வீரர்களுடன் நல்ல நட்பு இருந்தாலும், சிஎஸ்கே-வில் எனது புதிய பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.