BREAKING NEWS

100 ஏக்கர் நிலம் வைத்தவரை தான் திருமணம் செய்வேன்: மீனாட்சி சவுத்ரி

PR
priya priya punidha in சினிமா
Report
100 ஏக்கர் நிலம் வைத்தவரை தான் திருமணம் செய்வேன்: மீனாட்சி சவுத்ரி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மீனாட்சி சவுத்ரி, தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் வரிசைகட்டி படங்கள் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது வருங்கால கணவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் குறித்து மீனாட்சி சவுத்ரி பேசியது வைரலாகி இருக்கிறது. 

அதில் அவர், “என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.