நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, திருகோணமலை மாவட்டங்கள்.
மொத்தம் 20 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ (Red Alert) எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ (Amber Alert) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மின்னல் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கலாம். இதன்போது தற்காலிகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் பாதிப்புகளைத் தவிர்க்க, இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளியில் செல்வதைத் தவிர்த்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.