BREAKING NEWS

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகிறது பிறைக்குழு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகிறது பிறைக்குழு!

ஷவ்வால் மாதத் தொடக்கம் இன்று தீர்மானம்.ஹிஜ்ரி 1447 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் விசேட மாநாடு இன்று (19) மாலை மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட உலமாக்கள் கலந்துகொண்டு தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

நாட்டின் எந்தப் பகுதியிலாவது ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டால், தகுந்த ஆதாரங்களுடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது:

தொலைபேசி: 0112 432110 / 0112 451245

மின்னஞ்சல் / தொலைநகல்: 0112 390783

இந்த மாநாட்டின் முடிவில் பிறை தென்படுவது உறுதி செய்யப்பட்டால், புனித ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.