இலங்கையில் இயங்கி வரும் சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம், 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளது.
95 ஒக்டேன் பெட்ரோல்: ஒரு லீற்றருக்கு 122 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீசல்: ஒரு லீற்றருக்கு 219 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 572 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) விலைகளுடன் ஒப்பிடுகையில், சினோபெக் நிறுவனத்தின் 95 ஒக்டேன் பெட்ரோல் 32 ரூபாய் அதிகமாகவும், சூப்பர் டீசல் 129 ரூபாய் அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் சினோபெக் மாற்றம் செய்யவில்லை. லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம், தாம் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளையே பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளது.