BREAKING NEWS

“மார்ச் 11 அன்று வெற்றி விழாவில் புதிய இயக்குனர் அறிமுகம்”

PR
priya priya punidha in சினிமா
Report
“மார்ச் 11 அன்று வெற்றி விழாவில் புதிய இயக்குனர் அறிமுகம்”

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் ராதிகா நடிப்பில் ‘தாய்க்கிழவி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். 

அந்த படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய லாபத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா கடந்த மார்ச்மாதம்11ஆம் திகதி நடைபெற்றுள்ள நிலையில், அதில் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார். 

அம்மாமுத்து சூர்யா தான் அந்த படத்தை இயக்கப்போகிறார். அம்மாமுத்து சூர்யா ஏற்கனவே RJ பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அந்த படம் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கிறது. 

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் மூலமாக அவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 10 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.