இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தையும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் மறைந்தமை குறித்து குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
மறைந்த எஸ்.கே. சங்கக்காரவின் பூதவுடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக கண்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் நாளை (மார்ச் 4) மஹய்யாவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளன என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறந்த சட்டத்தரணியாகவும், தனது மகன் குமார் சங்கக்காராவின் விளையாட்டு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்த அவர் மறைவு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.